மஹாஓயா – அரலகங்வில பகுதியில் விபத்து – 22 பேர் காயம்

அம்பாறை, மஹாஓயா – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

எம்.டி.கே ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில் நேற்று (03.08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மஹா ஓயாவிலிருந்து அரலகங்வில திசை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று எதிர்திசையில் வந்த மற்றுமொரு தனியார் பஸ்ஸொன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த பஸ்களில் பயணித்த 02 ஆண்கள், 12 பெண்கள், 08 சிறுவர்கள் காயமடைந்த நிலையில் மஹாஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸொன்றின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share