மக்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாதுவிடின், எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்குமென பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதி மிகவும் அவதானமிக்க நாட்கள் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.