அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் 02 அமைச்சுக்களின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை குறித்து ஆராய்வதற்காக குறித்த இருவரும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply