
ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்விற்கு வருகைத்தந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
சவாலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நாமல் ராஜபக்ச தன் மீது நம்பிக்கை வைத்துள்ள கட்சிக்கும் நன்றி கூறினார்.
மேலும் ‘ஒரு கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிடும் வரை பாதுகாப்பானது. ஆனால் உலகின் கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்படவில்லை.”
சவாலை ஏற்கிறேன். ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் 2024 ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் நேற்று கட்சியின் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது. வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.