தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் (Srettha Thavisin) நீதிமன்ற உத்தரவின் ஊடாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சட்டத்தரணி ஒருவரை அமைச்சுப் பதவிக்காக நியமித்தமை காரணமாக, அவரை பிரதமர் பதவியிலிருந்து விலக்குமாறு கோரி அந்நாட்டு செனட் சபையின் 40 உறுப்பினர்களால் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனு மீதான விசாரணை, 9 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(14.08) நடைபெற்றது. இதன்போது தாய்லாந்து பிரதமர் ஒழுக்க விதிகளை மீறியுள்ளதால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென 5 நீதியரசர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளில் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாய்லாந்தின் 4வது பிரதமராக ஷ்ரெத்தா தவ்சின் பதிவாகியுள்ளார்.
இந்நிலையில் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் கூடும் வரை தாய்லாந்திற்கு இடைக்கால தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.