அண்மைகாலமாக சேலையை தேர்ந்தெடுக்கும் நடிகைகள் – வெளியாகிய புகைப்படங்கள்  

அண்மைகாலமாக சேலையை தேர்ந்தெடுக்கும் நடிகைகள் - வெளியாகிய புகைப்படங்கள்  

இந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், சமூக வலைத்தளங்களில் சேலையுடன் வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

அண்மைகாலமாக கவர்ச்சியான உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு வந்த அனுபமா பரமேஸ்வரன், சேலையுடன் கவர்ச்சியாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.  

‘பிரேமம்’ திரைப்படத்தில் தன்னுடைய நீண்ட சுருளான கூந்தலினுடனான தோற்றத்தினால் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அனுபமா, தற்போது கவர்ச்சியான தோற்றத்தினுடாக இரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகின்றார். 

கியூட் பெண்ணாக திரையில் அறிமுகமாகி செம்ம ஹாட் பொண்ணாக தென்னிந்திய திரைத்துறையில் வலம் வருகின்றார். 

தென்னிந்திய திரைப்பட நடிகை பிரியங்கா மோகனும் சமூக வலைத்தளங்களில் சேலையுடன் வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமாகிய பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் இரசிகர்களின் வரவேற்பை பெற்றார். 

பின்னர் சூரியாவுடன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான்  திரைப்படத்திலும், இறுதியா தனுஷ் நடிப்பில் வெளியாகிய கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 

முன்னணி நடிகர்களுடன் முக்கிய திரைப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா மோகன், தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

விஜய் சேதுபதியுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்குரியவர் காயத்ரி சங்கர், அண்மைகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார். அந்த வரிசையில் தற்பொழுது சேலையுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் படத்தில், மலையாள நடிகர் பகத் பாசிலின் மனைவியாக காயத்ரி சங்கர்  நடித்திருந்தார். 

விக்ரம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மாத்திரம் தோன்றியிருந்த போதும், தன்னுடைய நடிப்புக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.   

Social Share

Leave a Reply