திருகோணமலை, ஸ்ரீபுர-கெமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று(16.08) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காதிர்காமம், காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
T56 ரக துப்பாக்கி பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான ஶ்ரீபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.