மக்கள் நலனுக்காக ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – செந்தில் தொண்டமான்

மக்கள் நலனுக்காக ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - செந்தில் தொண்டமான்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில், மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தரைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இன்று(19.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கட்சியின் தேசிய சபை உறுப்பினர்கள் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்ததாகவும், இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். 

இதன்போது, மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், எதிர்க்காலத்தில் குறித்த விடயங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக கைச்சாத்திடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உறுதியளித்தார். 

Social Share

Leave a Reply