சஜித் என்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – முஷரப் எம்.பி  

சஜித் என்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும் - முஷரப் எம்.பி  

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21.08) தன்னுடைய பெயரை சுட்டிக்காட்டி முன்வைத்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷரப் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மறுத்தமைக்காக ரிஷாத் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இல்லாமல் செய்து, அந்த 300 மில்லியன் ரூபா நிதி பாராளுமன்ற உறுப்பினர் முஷரப்க்கு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21.08) குற்றம் சுமத்தியிருந்தார். 

இவ்வாறு தனக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்வைத்த கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது எனவும், இத்தகைய கருத்துக்களை முன்வைத்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒற்றை சிங்கமாக நின்று நாட்டை கட்டியெழுப்பிய காரணத்தினால், அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும், தன்னுடைய பிரதேசத்தை சேர்ந்த மக்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் 7 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றிணைந்து இன்று (21.08) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் இதனை தெரிவித்துள்ளார். 

அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்த போதும், அதே கட்சியை சேர்ந்த எஸ்.எம்.எம்.முஷரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். 

Social Share

Leave a Reply