A/L சித்தியடையாத வைத்தியர்கள் சர்ச்சை- உயர்கல்வி இராஜாங்க அமைச்சரின் பதில்

A/L சித்தியடையாத வைத்தியர்கள் சர்ச்சை- உயர்கல்வி இராஜாங்க அமைச்சரின் பதில்

வவுனியாவில் மன்னாரிலும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள் என்றும், அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை எனவும் வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையயாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனிடம் வி மீடியா பணிப்பாளர் விமல் கருத்து கோரியிருந்தார். அதற்கு கீழ்வருமாறு அவர் பதில் வழங்கியிருந்தார்,

வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும். அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை. அவர் படித்த கல்லூரி உலக புத்தகத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக ரஸ்சியாவில் ஒருவர் படிக்கிறார் என்றால், அவர் கற்கும் பலக்லைக்கழகம், உலக பல்கலைக்கழக புத்தகத்தில் உள்ளதாக என்பதே முக்கியம். அவருக்கு அனுமதியை நாம் வழங்குவோம். அவர் கற்று திரும்பியதும் இலங்கை மருத்தவர் சங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு வருடத்துக்கான பயிற்சி இங்கே வழங்கப்படும். அதன் பின்னர்தான் அவர்கள் சேவையாற்ற முடியும்.

உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம். உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது. உயர்தத்தில் 3 A எடுத்த கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்கச் இயலாமல் காணப்படுகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போறம் என கேள்வி எழுப்பினார்.

Social Share

Leave a Reply