அனுராதபுரம், தலாவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(28.08) காலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர் வரகொட தலாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
தனது காணிக்கு அருகிலுள்ள, காணியின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பக்கத்துக் காணியின் உரிமையாளர் துப்பாக்கியால் குறித்த நபரை சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்ய தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.