2024ம் ஆண்டிற்கான பாரிஸ், பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
67.03 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்த சமித துலான் தனது F44 பிரிவில் உலக சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இந்தியாவும், வெண்கல பதக்கத்தை ஆஸ்திரேலியாவும் கைப்பற்றியது.
சமித துலான் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.