வசூல் சாதனையில் ‘கோட்’

வசூல் சாதனையில் 'கோட்'

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜயின் 68ஆவது படமாக உருவாகியிருக்கும் ‘கோட்’ திரைப்படம் நேற்று (05.09) உலகளாவிய ரீதியில் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் வெளிவரும் முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்ததிலும் பார்க்க இத்திரைப்படம் சிறப்பாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

400 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், வெளியாகிய முதல் நாளில் மாத்திரம் 126.32 கோடி இந்திய ரூபாய் வசூலித்துள்ளது எனத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று (06.09) தனது X (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் இறுதி திரைப்படத்திற்கு முந்திய திரைப்படம் என்பதனால் அதிக ரசிகர்கள் திரையரங்குகளில் இத்திரைப்படத்தினை காண ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இலகுவில் 1000 கோடி இந்திய ரூபாய்க்கும் மேல் இத்திரைப்படம் வசூலிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகின்றது.

Social Share

Leave a Reply