சஜித் – ரணில் இணைய வேண்டும்: வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர்

சஜித் - ரணில் இணைய வேண்டும்: வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நேற்றைய தினம்(07.09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றியிருந்தார்.

இங்குக் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ,

“மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. பழைய பாணிற்கு மேலாக ஐசிங் தடவியும், புதிய சால்வைகளை அணிந்து கொண்டுமே மக்கள் விடுதலை முன்ணணியினர் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

நான் எப்பொழுதும் ரணில் விக்ரமசிங்கவுடனேயே இருக்கின்றேன். எனக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு எவ்வித எதிர்பார்ப்புக்களும் இல்லை. சஜித் பிரேமதாச என்பவர் நாட்டிற்குத் தேவையான தலைவர், அதனாலேயே அவரை ரணிலுடன் இணையுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

கடந்த காலங்களிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைப்பது ஒன்று, ஆனால் அவருடைய வாயிலிருந்து வரும் கருத்துக்கள் வேறொன்று. இந்த விடயம் அவருக்கும், எங்களுக்கும் பாதகமாக அமைந்துள்ளது. தற்பொழுது ரணில் விக்ரமசிங்க ஏனைய வேட்பாளர்கள் தொடர்பில் கதைக்க வேண்டிய தேவையில்லை. அவர் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையில் இருக்கின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் சேவைகள் எமக்குத் தேவைப்படுகின்றது. இருப்பினும் தற்பொழுது அவரை புறம் தள்ளியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply