
தேசிய மக்கள் சக்தி தனது அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வழக்கறிஞர்கள் மாநாட்டில் நேற்று (08.09) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அனுர,
”இலங்கையில் நீதித்துறை மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் ஆபத்தில் உள்ளது. ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிசெயற்படுகிறார். உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு கூட அவர் மதிப்பளிப்பதில்லை.
சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நீதித்துறை மேலாதிக்கம் என்ற கருத்தை மீண்டும் நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி உறுதியளிக்கிறது.
“நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்வோம். எங்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக நீதித்துறையை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.