எதேச்சதிகாரமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வோம் – சஜித்

எதேச்சதிகாரமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வோம் - சஜித்

அரசியலமைப்பை மதித்து அதன் சட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான அரசாட்சி ஒன்றுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கம்
கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (07.09) முறைமை மாற்றத்திற்கான சட்ட சீர்திருத்தங்கள் எனும் தொனிப்பொருளில் மாநாடொன்றை நடத்தியது.

இங்கு சீர்திருத்த சட்ட முறைமைக்கான தனது நோக்கை கோடிட்டுக் காட்டும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரை நிகழ்த்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இருவகையான எதேச்சதிகாரமான ஆட்சியின் ஊடாக இந்த நாட்டின் ஜனநாயகத்தை சீரழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டிற்குள் சர்வாதிகாரப் போக்கை உருவாக்கி இனவாதத்தையும், இன பேதத்தையும், மதவாதத்தையும், மதபேதத்தையும் அரச நிகழ்ச்சி நிரலில் உயர் மட்டத்திற்கு கொண்டு வந்து, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்ற, அதிகாரம், நிறைவேற்ற அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளோடு, அதிகாரங்களுக்கிடையேயான பகிர்வை முழுமையாக மீறி, நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாக பயன்படுத்துகின்ற செயற்பாட்டிற்கு சென்றனர்.

இந்த மோசமான ஆட்சியை ஜனநாயகப் போராட்டம் ஒன்றின் மூலமாக வெளியேற்றினார்கள். ஆரம்ப காலப்பிரவல் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தி எதேச்சதிகார செயற்பாட்டின் மூலமாக இந்த நாட்டின் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டது. அதன் பிற்பாடு தற்போதைய புதிய பதில் ஜனாதிபதியினாலும் எதோச்சதிகாரத்தை மோலோங்கச் செய்து, நிறைவேற்று அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டு, தன்னிச்சையாக அரசியல் அமைப்பின் சட்ட விதிமுறைகளை வெளிப்படையாக மீறி, அவர்களுக்கு விருப்பமான பொலிஸ்மா அதிபரை நியமித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இப்பொழுது உயர் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி இந்த நாட்டு மக்களின் மக்கள் ஆணையையும், வாக்குரிமையையும் மீறி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்காமையானது அடிப்படை உரிமையை மீறியதாக சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் ஏகமானதாக தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

நாட்டின் அரசியலமைப்பு ஒரு தனி நபரை மையப்படுத்தியதாக இல்லாமல், ஜனநாயகம், சுதந்திரத்திற்கான மக்கள் உரிமை மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பலப்படுத்தப்படுதல் போன்ற விதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்றது” என்றார்.

மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாத செய்கின்ற, அரசியலமைப்பிற்கு தலைமைத்துவத்தை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply