மகாராஜா, ஜிகர்தண்டா டபள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 29 இந்திய படங்களும் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
97வது ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் இந்தியில் வெளியான ‘லாப்பட்டா லேடீஸ்’ படம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் மகாராஜா, ஜிகர்தண்டா டபள் எக்ஸ், கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 29 இந்திய படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்கார்’ விருது, சினிமா உலகில் பெரிய விருதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியப் படம் ஒருமுறையாவது இந்த விருதைப் பெற்று விடாதா என்பதே சினிமா இரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.