இன்று(24.09) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 11 ஆம்திகதி வரை வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டதனை தொடர்ந்தது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தான் பதவிக்கு வந்ததும் உடனடியாக பாரளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடாத்தப்படுமென ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தனது கொள்கை விளக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. தேர்தலில் வென்றதும் இதனை மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.