2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு(08.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அவுஸ்ரேலியா 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவுஸ்ரேலியா சார்பில் பெத் மூனி 40(32) ஓட்டங்களையும், எல்லிஸ் பெர்ரி 30(24) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூசிலாந்து சார்பில் பந்து வீச்சில் அமெலியா கெர் 4 விக்கெட்டுக்களையும், ரோஸ்மேரி மெய்ர், ப்ரூக் ஹாலிடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
148 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் அமெலியா கெர் 29(31) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அவுஸ்ரேலியா சார்பில் பந்து வீச்சில் மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சோபி மோலினக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, அவுஸ்ரேலியா மகளிர் அணி 60 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதுடன், அவுஸ்ரேலியாவின் மேகன் ஷட் ஆட்ட நாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார். குழு Aயில் உள்ள அவுஸ்ரேலியா இதுவரை பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.