மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அறிவிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அறிவிப்பு

இலங்கையின் மஹேல ஜயவர்தன, இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2017ம் ஆண்டு தொடக்கம் 2022ம் ஆண்டு வரை மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.  

2022ம் ஆண்டு, சர்வதேச ரீதியில் நடைபெறும் பிரீமியர் லீக் தொடர்களில் பங்கேற்கும் அனைத்து மும்பை இந்தியன்ஸின் கீழ் இயங்கும் அணிகளுக்கு தலைமை பொறுப்பு (Global Head of Cricket) மஹேல ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டது.

அவருடைய தலைமையில், இந்தியாவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடர், அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச டி20 லீக் ஆகியவற்றில் மும்பை இந்தியன்ஸின் கீழ் பங்கேற்ற அணிகள் சாம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தன.  

இந்நிலையில், மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மஹேல ஜயவர்தன தலைமை பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Social Share

Leave a Reply