இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் சிலர் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரா டாக்கா கபிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அதிரடியாக துடுப்பெடுத்தாட கூடிய திறன் கொண்ட திசர பெரேரா, டாக்கா கபிட்டல்ஸ் அணிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிட்டகாங் கிங்ஸ் அணி இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான பினுர பெர்னாண்டோ ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.
இலங்கையின் தற்போதைய முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பத்தும் நிசங்க, பார்ச்சூன் பாரிசல் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து விதமான போட்டிகளிலும் இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டத்திற்கு பெரும் பலமாக இருக்கும் பத்தும் நிசங்க, பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தர்பார் ராஜ்ஷாஹி அணியில் லஹிரு சமரகோன் இடம்பெற்றுள்ளார். இவர் அணியின் பந்து வீச்சு வரிசைக்கு வலு சேர்க்கவுள்ளார்.
2025ம் ஆண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.