ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(30.10) பிணை வழங்கியுள்ளது.

அண்மையில் கொழும்பிலுள்ள ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் கடந்த 23ம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, அவரை ஒக்டோபர் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (30.10) முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply