வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் வைத்தியசாலையில்

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் - இருவர் வைத்தியசாலையில்

புத்தளம், வென்னப்புவ – கிம்புல்கான பிரதேசத்தில் அடையாளப் தெரியாத நபரொருவரால் இன்று (07.11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Social Share