இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு T20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை ஒன்றுக்கொன்று என சமன் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது நாளை (11.13) முதல் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளடங்கிய ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இத்தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விலக்கப்பட்டுளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீசும்போது அவரது இடது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக இத்தொடரில் இருந்து வனிந்து விலகியுள்ளார். இதன் காரணமாக கொழும்பு திரும்பியுள்ள அவர் உயர் செயற்திறன் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் ஹசரங்க விற்கு பதிலாக இலங்கை குழாமில் சகலதுறை வீரரான டுஸான ஹேமந்த இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் கடந்த LPL தொடரில் சிறப்பாக செயற்பட்டவர்.