மக்கள் நினைத்தது போன்றே மாற்றம் ஏற்பட்டுள்ளது – ஆனந்தகுமார்

மக்கள் நினைத்தது போன்றே மாற்றம் ஏற்பட்டுள்ளது - ஆனந்தகுமார்

நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்தது போல தற்போது புதிய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, அதன் ஓர் அம்சமாகவே ஒட்டுமொத்த மலையகத்தின் மாற்றமாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து எமக்கு ஒரு பிரதி அமைச்சர்கிடைத்துள்ளார் என ஐ.தே.கயின் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவரேனும் களமிறக்கப்படாமை தொடர்பிலும் ஆனந்தகுமார் அண்மையில் கவலை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது புதிய அரசாங்கத்தில் புதிதாக இரண்டு தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை மற்றும் மலையக மக்கள் சார்பில் பாராளுமன்றில் குரல் எழுப்புவதற்கு தற்போது இரத்தினபுரியில் இருந்து சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, பிரதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட அவரை அமைச்சில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆனந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“நாடு புதியதொரு மாற்றத்தை நோக்கி நகர்கிறது, புதியவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்கள், 21 அமைச்சர்கள், 28 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள், அதில் 03 தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மாத்தறை, மற்றும் இரத்தினபுரியில் இருந்தும், வடக்கிலிருந்தும் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், இன, மத, பேதமின்றி இனியாவது இந்த நாட்டில் மக்களின் நலன் சார்ந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

அமைச்சில் சுந்தரிங்கம் பிரதீப்யை சந்தித்து பல விடயங்கள் நட்பு ரீதியாக பேசினேன், மலையக மக்களில் நீண்டகால மற்றும் தற்கால தேவைகள் தொடர்பிலும், சமூகத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பிலும் நாங்கள் பேசினோம்.

அவரிடமும் நல்லதொரு தூர நோக்கு சிந்தனை இருக்கிறது, அது புதியதொரு விடியலாக மலையக மக்களின் வாழ்வில் இனியாவது நாம் நினைத்த மாற்றங்கள் நிகழ வேண்டும் என நான் நினைக்கிறேன், எமது சமூகத்தின் நலன் சார்ந்து எங்களின் சிந்தனைகள் நான் நேரடி அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் தொடரும் என்றும், எந்த ஒரு நல்ல விடயத்திற்கும் என் குரலானது தாமதிக்காமல் ஒலிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply