மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை

மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க எவ்வித தடையும் இல்லையென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க எவ்வித தடையும் இல்லை. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை
நடத்த முடியும்.

நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Social Share

Leave a Reply