ஹார்ட்லி கல்லூரி மாணவன் இலங்கை அணிக்காக அபாரம்

ஹார்ட்லி கல்லூரி மாணவன் இலங்கை அணிக்காக அபாரம்

இலங்கை 17 வயதுக்குட்பட்ட அணிக்கும், பங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணிக்குமிடையிலான போட்டியில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷ் மிக அபாரமாக பந்துவீசி பங்களாதேஷ் அணியை உருட்டி எடுத்துள்ளார். பங்களாதேஷ் அணி 76 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்ற வேளையில் பந்துவீச அழைக்கப்பட்ட ஆகாஷ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்ளை கைப்பற்றி பங்களாதேஷ் அணியை தடுமாற வைத்தார். மேலும் ஒரு விக்கெட்டை சிறிய இடைவேளையில் கைப்பற்ற முழுமையாக பங்களாதேஷ் அணி தடுமாறியது. இறுதியில் ஆகாஷ் 5 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். பங்களாதேஷ் அணி இறுதியில் 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 5.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 23 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

Social Share

Leave a Reply