வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply