வெள்ளம் காரணமாக முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதின் நேற்றைய தினம் (25.11) நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் மன்னார்,அரசாங்க அதிபர், க. கனகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
மன்னார் மாவட்டத்தில். அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் இரண்டு மூன்று தினங்களாக சமைத்து உண்பதற்கு மிகவும் சிரமப்படுகிறாரகள். அவர்களுக்கு சமைத்த உணவை வழங்கும் படி அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினரிடமும் கூறியுள்ளேன், மற்றும் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கூறியிருக்கிறேன்,
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு,அவர்களின். குறைகளைக் கேட்டறிந்தபின், மக்களின் அவசரத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய, நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், தொலைபேசி வாயிலாகவும், கடிதமூலமாகவும் அறிவித்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்