பிரதி சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

கடந்த 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் குழுவொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று (08/12) இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இக்குழுவை நியமித்தார்.

அதற்கமைய குறித்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, கயந்த கருணாதிலக்க, ரவூஃப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, விஜித்த ஹேரத் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதி சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

Social Share

Leave a Reply