தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாள் இன்றாகும்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குநராக அடையாளம் கண்டவர்.
பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். அத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்தார்.
இன்று பா.ரஞ்சித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘சியான் 61’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள ஸ்டுடியோ கிரீன், ரஞ்சித் இயக்கிய படங்களின் மாஸ் காட்சிகளை கொண்டு வீடியோ ஒன்றையும் உருவாக்கி பகிர்ந்துள்ளது.