மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்த நாமல் ராஜபக்ச இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி மன்மோகன் சிங்கின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில்
நேற்று முன்தினம் காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வயது மூப்பு, உடல்நல குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் தேசிய அளவில் 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply