தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இன்று(28.12) நியூசிலாந்திலுள்ள மௌன்ட் மௌன்கனுயில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-0 என தொடரை முன்னிலையில் உள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே வேகமாக விக்கெட்களை இழந்தது. 6 விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த மிச்சல் பிரேஸ்வல் மற்றும் டேரில் மிச்சல் ஆகியோர் 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் டேரில் மிச்சல் 62(42) ஓட்டங்களையும், மிச்சல் பிரேஸ்வல் 59(33) ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ. மஹீஸ் தீக்ஷண, வணிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மதீஷா பத்திரன 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி அதிரடியான ஆரம்பத்தை ஏற்படுத்தியது. முதல் விக்கெட் இணைப்பாட்டமாக பத்தும் நிஸ்ஸங்க மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியபர் 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டவுடன் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிஸ்ஸங்க 90(60) ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 46(36) ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேகப் டபி 3 விக்கெட்களையும், மட் ஹென்றி, சகாரி போல்க்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனாக ஜேகப் டபி தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply