ஐரோப்பா நோக்கி படகில் சென்றவர்கள் பலர் மரணம்

ஐரோப்பா நோக்கி படகில் சென்றவர்கள் பலர் மரணம்

டுனீசியா கடற்கரையில் 27 ஆபிரிக்கா பிரஜைகளின் இறந்த உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மத்தியதரைக்கடலை கடக்க முயற்சித்த புலம்பெயர் நபர்களே இவ்வாறு இறந்திருக்கலாம் என டுனீசியா கடற்பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு படகுகளில் இவ்வாறு முயற்சித்தவர்களே இறந்துள்ளார்கள்.

ஆபிரிக்கர்கள், ஐரோப்பா நோக்கி நகர்வதற்கான ஆரம்ப புள்ளியான ஸ்பக்ஸ் நகரத்தில் இருந்தே இந்த படகுகள் புறப்பட்டுள்ளன. கடந்த மாதம் இதே போன்று முயற்சித்த 30 பேர் இறந்த நிலையில் டுனீசியா கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்தனர். அதேவேளை மூழ்கிய படகிலிருந்து 87 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா நோக்கி குடி பெயர்வதற்கான முக்கிய நாடாக டுனீசியா மாறியுள்ளதாகவும், லிபியா குறைந்து டுனீசியாவிலிருந்தும், ஏனைய நாடுகளிலிருந்தும் அதிகமானவர்கள் டுனீசியா மூலமாகவே குடி பெயர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply