வவுனியா வடக்கு பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று(03.01) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மக்கள் குறைகேள் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
இச்சந்திப்புக்களின் போது, வீதிகள் திருத்தம், சட்டவிரோத கிரவல்மண் அகழ்வு, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினை, அரச படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுக்காணிகள், நெல் தளங்கள் அமைத்தல், ஆலய கட்டுமான தேவைப்பாடுகள், பாடசாலைகளுக்கு உதவிகள், அறநெறி பாடசாலைகளின் உருவாக்கம், முன்பள்ளிகளின் தேவைப்பாடுகள், பொது அமைப்புக்களுக்கான உதவிகள், வீதி விளக்குகளின் தேவைப்பாடுகள், வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பொது மக்களால் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டது.
மக்களால் முன்வைக்கப்பட்ட மேற்படி பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுத்திருந்தார்.