வாகன இறக்குமதி ஆரம்பிக்கபப்ட்டாலும் சில சந்தர்ப்பங்களில் வாகனங்களுக்கான வரிகள் 600% வரை அதிகரிக்கக்கூடும், மேலும் சில வாகனங்கள் 400% அல்லது 500% வரை உயர்வடையுமென்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு உரையாற்றிய VIASL தலைவர், வரிகள் தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பை மட்டமே அரசாங்கம் வெளியிட்டுள்ளதாகவும், ஏனைய விடயங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள வாகன இறக்குமதி உரிமையாளர் சங்கத்தின் தலைவர், வாகனத்தின் மதிப்பு, ஆடம்பர வரி, சுங்க வரி, காப்பீடு மற்றும் சரக்கு வரி (CIF) மற்றும் தற்போதுள்ள 18% VAT ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு இறக்குமதி வரி உட்பட சகல வரிகளையும் கணக்கிட்ட பிறகு ஒரு வாகனத்தின் இறுதி விலை தீர்மானிக்கப்படும் எனவும் தெரிய்வித்துள்ளார்.
பொதுமக்கள் வரி அறவீடுகள் தொடர்ப்பில் குழப்பமடைய வேண்டாமெனவும், வாகன இறக்குமதியைத் தொடங்குவதற்கு முன்பு முன்கூட்டியே பணம் செலுத்துதல் மற்றும் வாகன முன்பதிவுகளைச் செய்வதற்கு அவசரப்படவேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தினார்.
சுசுகி, டொயோட்டா, ஹொண்டா, நிசான், மிட்சுபிஷி மற்றும் மஸ்டா ஆகிய தயாரிப்புகள் உட்பட பல பெட்ரோல் அல்லாத கலப்பின வாகன வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சுசுகியின் கீழ், எவரி ரூ. 1.3 மில்லியனுக்கும், ஸ்பேசியா மற்றும் ஆல்டோ ரூ. 1.9 மில்லியனுக்கும், டெய்ஸ் மற்றும் யாரிஸ் ரூ. 2.4 மில்லியனுக்கும், கொரோலா ரூ. 6.6 மில்லியனுக்கும், சிஎச்ஆர் ரூ. 4.6 மில்லியனுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா N-BOX, N-ONE மற்றும் N-WGN ஆகியவற்றை ஒவ்வொன்றும் ரூ. 1.9 மில்லியனுக்கும் வழங்குகிறது. நிசான் டேய்ஸை ரூ. 1.9 மில்லியனுக்கும், கிளிப்பர் NV100 ரூ. 1.3 மில்லியனுக்கும் வழங்குகிறது. மிட்சுபிஷி மினிகேப்பை ரூ. 1.3 மில்லியனுக்கும், மஸ்டா ஸ்க்ரமையும் அதே விலையில் வழங்குகிறது.
பெட்ரோல் வாகன வகைகளான, சுசுகி வேகன் ஆர், ஸ்பேசியா மற்றும் ஹஸ்ட்லரை ரூ. 1.8 மில்லியனுக்கும், ஸ்விஃப்ட் ரூ. 3.2 மில்லியனாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் ஹைப்ரிட் வகைகளான ரேய்ஸ் ரூ. 3.2 மில்லியன், ஆக்சியோ மற்றும் அக்வா ரூ. 5.1 மில்லியன், யாரிஸ் (கிராஸ்), கொரோலா ஃபீல்டர் மற்றும் கொரோலா (கிராஸ்) அனைத்தும் ரூ. 5.1 மில்லியன் விலைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கொரோலா மற்றும் பிரியஸ் ரூ. 11.3 மில்லியன் விலையிலும் ஹொண்டாவில் ஃபிட்ஸ் ரூ. 3.5 மில்லியன், வெசெல் ரூ. 5.1 மில்லியன் விலையில், மற்றும் N-BOX, N-WGN, N-ONE மற்றும் ஷட்டில் ரூ. 1.8 மில்லியன் ஆகவும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மஸ்டாவின் ஹைப்ரிட் கரோல் மற்றும் ஃபிளேர் ஆகியவை இரண்டும் ரூ. 1.8 மில்லியன் ஆகவும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு அதிகம் இல்லாத பழைய வாகனங்களுக்கு 200 சதவீதம் மற்றும் 300 சதவீதம் கலால் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. சில வகை வாகனங்கள் அவற்றின் எஞ்சின் சிலிண்டர் திறன், கிலோவாட்களில் அளவிடப்படும் மோட்டார் சக்தி மற்றும் உற்பத்தி ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் கலால் வரிகள் விதிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் இறக்குமதி அதிகரிக்கப்பட்டாலும், விலை அதிகரிப்புக்கான வாய்ப்பு இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.