ஹெலிகொப்டர் விபத்தில் நேற்று (08/12) அகால மரணமடைந்திருந்த இந்திய முப்படை இராணுவ தளபதி உட்பட 13 பேரின் சடலங்களை அவர்களது சொந்தவூருக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த முப்படை தலைமைய தளபதி பதவிக்கு ஜெனரல் நரவனேயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக முப்படைக்கும் ஒரே தலைமை தளபதி என்ற பதவி கடந்த வருடம் உருவாக்கப்பட்டு அதற்கு பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது திடீர் மறைவை தொடர்ந்து பதவி வெற்றிடத்திற்கு ஜெனரல் நரவனேயை நியமிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சு பரிசீலனை செய்து வருவதாக அறியமுடிகிறது.
எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் பிபின் ராவத் தனது 62அவது வயதில் ஓய்வு பெற இருந்த நிலையில், தலைமை தளபதி பதவியேற்றமையின் காரணமாக அவரது ஓய்வு பெறும் வயதெல்லை 65ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை விபத்துக்குள்ளான இராணுவ ஹெலியின் கருப்புப் பெட்டி நேற்றிரவு (08/12) 3 மணித்தியால தேடுதலுக்குப் பின்னர் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் என்னும் இடத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.