நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20.01) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை (25.01) நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.