ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை சாதகமாக முடிவுக்கு வந்ததாக மேலும் தெரியவருகிறது.
ஒரு கூட்டணியின் கீழ் அடுத்த வரும் தேர்தலில் இரு கட்சிகளும் சேர்ந்து போட்டியிடுவது என முடிவு எட்டப்பட்டுளளதாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இரு கட்சி தரப்பினரும் தெரிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் இரு கட்சியும் தனித்து போட்டியிட்டமையினால் தங்களால் உரிய அடைவை எட்ட முடியவில்லை என கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இதன் காரணமாக இரு கட்சிகளும் இணையவேண்டுமென்ற இறுக்கமான கோஷம் முன்வைக்கப்பட்டது.
நேற்று(21.01) கொழும்பில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பில் ருவான் விஜயவர்தன, தலதா அத்துகொரள, கயந்த கருணாதிலக, ஹர்ஷண ராஜகருணா போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.