2025/27 பருவ காலத்திற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகக் சபையை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன்(22.01) முடிவடைந்துள்ளது. தலைவர் பதவிக்கு 4 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விளையாட்டுச் சட்டத்தின்படி, தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ள விளையாட்டுக் கழகங்களின் எண்ணிக்கை 59 ஆகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விளையாட்டுக் கழகங்களில் 56 கழகங்கள் தற்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவை தலைவர் வேட்பாளராக நியமித்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களான சமந்தா தொடன்வல மற்றும் ஜெயந்த தர்மதாச ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர். இவர்களோடு காலி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலீப சார்லஸின் வேட்புமனு தேர்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை, எனவும் தேர்தல் மார்ச் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் குழு அறிவித்துள்ளது.