எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கரையோரத்தில் கடந்த மே மாதம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் மேற்கு கரையோரத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணிகளை முன்னெடுக்க கப்பல் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய குறித்த கழிவுகளை அகற்றுவதற்கு ஷாங்காய் சால்வேஜ் என்ற நிறுவனத்துடன் கப்பல் உரிமையாளர்கள் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர்.

இதேவேளை தீ விபத்தின் போது கடலுக்குள் விழுந்த கொள்கலன்கள் மற்றும் கப்பலின் எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகளை ரிசோல்வ் மெரின் என்ற நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

சைட் ஸ்கேன் சோனர் தொழிநுட்பத்தினூடாக கடலுக்குள் மூழ்கியிருக்கும் கப்பலின் எஞ்சிய பாகங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்

Social Share

Leave a Reply