மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் ஆராய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் ஆராய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டண நிவாரணத்தை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பதை ஆராயும் பொருட்டு, இலங்கை வர்த்தக சபை, வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், தேசிய கைத்தொழில் சபை, கட்டுமான தொழில் சபை மற்றும் கூட்டு வர்த்தக சபை ஆகியவற்றுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் அது அமலாக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 0-30 வரையிலான வீட்டுப் பிரிவிற்கான அலகுக் கட்டணத்தை ரூ.6 லிருந்து ரூ.4 ஆகவும், 31-60 வரையிலான பிரிவிற்கான அலகுக் கட்டணத்தை ரூ.9 லிருந்து ரூ.6 ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டு உபயோகத்துக்கு 20 சதவீதமும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 21 சதவீதமும், ஹோட்டல்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறையினருக்கு 30 சதவீதமும், பொதுத்துறைக்கு 12 சதவீதமும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டன.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, அரசு நிறுவனங்கள் மற்றும் தெருவிளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதம் குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Social Share

Leave a Reply