ஊடகவியலாளர் லசந்த படுகொலை – நீதியை உறுதி செய்வதாக அரசாங்கம் அறிவிப்பு

ஊடகவியலாளர் லசந்த படுகொலை - நீதியை உறுதி செய்வதாக அரசாங்கம் அறிவிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம்
அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த பிரதமர்,

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தேவைப்படுமாயின், லசந்த விக்ரமதுங்கவில் படுகொலை சம்பவம் தொடர்பில் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் .
இந்த விடயத்தை நிவர்த்தி செய்ய முழு நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம்

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. லசந்த விக்கிரமசிங்கேவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கடந்த காலங்களிலும் எங்கள் நிலைப்பாடு அதுதான். இன்றும் எங்கள் நிலைப்பாடு அதுதான்.

இந்த விடயத்தில் நீதி வழங்க நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நான் அவருக்கு உறுதியளிக்கிறேன்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் விரிவாக கலந்துரையாடியுள்ளோம்” என்றார்.

Social Share

Leave a Reply