மித்தெனிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.