அம்பலாங்கொடை, மாதம்பே பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு சிறு குழந்தை இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒரு ஆண் குழந்தை என்றும், சுமார் இரண்டு மாத வயதுடையது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அம்பலாங்கொடை தலைமையக ஆய்வாளர் பிரசன்ன அல்கிரியகேவுக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, சாலையோரத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்கையின் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக பலபிட்டிய ஆதார மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.