அரகலய போராட்டம் – சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள் குறித்து மனு தாக்கல்

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தின் போது ​​வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள்
குறித்து விசாரணைகள் மேற்கொள்ளுமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரவீந்திரநாத் தாபரே இன்று (11.03) இந்த மனுவை தாக்கல் செய்தார்.

பொய்யான தகவல்கள் மூலம் பெறப்பட்ட எந்தவொரு நிதியையும் திரும்பப் பெற உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா,
முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தற்போதைய
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட பதினைந்து பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply