பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பில் பலத்த பாதுகாப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பாதுகாப்பு கடமைகளுக்காக 6,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரை தவிர இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வீதித்தடை கண்காணிப்புகளுக்காக இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்படுவதோடு பொலிஸார், சிவில் உடை மற்றும் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply