பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றிச் செல்லும் லொரிகளின் மீன் பெட்டிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக
கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 02 கிலோகிராம் 40 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply