குறுஞ்செய்திகள் இலவச சேவை – ரணில் தரப்பு பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக
எழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

கடந்த அரசாங்கங்களின் ஜனாதிபதிகள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை இலவசமாக அனுப்பியதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில்
பணியாற்றிய தினுக் கொழும்பகே தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் இலவசமாக வழங்கப்படும் சேவையென அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மாத்திரம்,சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்திகளை அனுப்புவதற்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறியதையடுத்து தினுக் கொழும்பகே விளக்கமளித்துள்ளார்.

Social Share

Leave a Reply