பொசொன் வாரம் இன்று (07.06) ஆரம்பித்து எதிர்வரும் 13ம் திகதி வரை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேசிய பொசொன்விழா அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை விகாரைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய பொசொன் பண்டிகைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆர். விமலசூரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவச ரயில் சேவை இயக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.